செய்முறை - 3 பேருக்கு ( என்னை மாறி சாப்பிடுறவங்களுக்கு )
அரிசி - ஒண்ணேகால் ஆழாக்கு
தண்ணீர் - 500ml
காரட் - 3
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி (ஊற வைத்தது ) - ஒரு ஆழாக்கு
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு அரைத்தது - 1 டீஸ்பூன்
எண்ணை - 3 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
பட்டை,கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
முதலில் அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். நாம parallel ஆ அடுத்த வேலை பாக்கலாம். குக்கர் ஐ அடுப்பில் வைத்து நெய்யையும் எண்ணையையும் ஊற்றவும். சிறிது சூடான பிறகு சோம்புவை பொரித்துக்கொள்ளவும் .மசாலா பொருட்கள் அதாவது பட்டை, ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலை இவற்றை துண்டாக்கி வறுக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கிளறிவரவும்.நீட்டு நீட்டாக cut பண்ணிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய்,சிறியதாக கட் பண்ணிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு cut பண்ணிய காரட்,பீன்ஸ் மற்றும் ஊறவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து கிளறிவிடவும். தேவைகேற்ப மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.ஊறவைத்த அரிசியை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். தண்ணீர் ஊற்றி cooker ஐ மூடி 2 விசில் வரை வேகவிடவும். டோட்டோடைங்க்க்க்... veg rice ரெடி.

மொத்த நேரம் 30-40 நிமிடங்கள் .
இதிலிருந்து நமக்கு கிடைக்கும் நீதி.
1. என்னைக்காவது நாம் சமையலை ஏற்றுகொண்டால் வீட்டு அம்மணிக்கு ரொம்ப சந்தோஷம். அடுத்தவங்களை சந்தோஷ படுத்தி பார்ப்பதுதானே நமக்கு சந்தோஷம் . ( என்ன கொடுமை சரவணன் இது ...)
2. "சமையல் பண்ணுறது ரொம்ப கஷ்டம். நீங்க வேணும்னா சமைச்சு பாருங்களேன்" அப்படின்னு அவுங்க விடுறதுலாம் பீலா. உண்மையிலே ரொம்ப easy.
No comments:
Post a Comment