உனது பார்வையில்
கொஞ்சமே போதும்தான்..
சிகரங்களை தொடுவதற்கு .
ஆனாலும்
தோற்கவே விரும்புகிறேன்
எனது தாயின்
அரவணைப்பிற்காக ...
சொர்க்கத்தின் வாசலை
திறந்து காட்டியவள் நீதான்..
ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால்..
எனக்கு உயிர் கொடுத்தவள்
நரகத்தின் ஜுவாலைகளை
(எனக்காக) தின்றவளாயிற்றே...
ஒரு கையில்
தென்றலையும்
மறு கையில்
உன்னையும் கோர்த்து
கடற்கரை மணலில்
கால்புதைய நடக்கும்
சுகம் மட்டுமே போதும்தான்..
ஆனால்..
என்னை உயிரில் சுமந்து
உடம்பை கரைத்து
முட்களில் நடந்தவள்
என் தாயல்லவா?
நீ வேண்டுமானால்
உனதன்பை
என்
இதயத்தின் உட்சுவற்றில்
கிறுக்கிஇருக்கலாம்...
ஆனால்
இரத்தத்தாலும்
சதையாலும்
என்னையே
செதுக்கியவள் முன்னால்
நீ எம்மாத்திரம்?
Subscribe to:
Post Comments (Atom)
nadru ungal oppidu.....................
ReplyDeletemiga miga arumai paari !!!!!! Vazhthukkal really am proud of u ... keep it up my dear friend!
ReplyDeletepari eppadi ithullam...... nice..( pakkathla wife illa ? )
ReplyDelete