அவன் பெயர் குப்புசாமி... குப்புசாமி னா சொன்னேன்?? .. வேணாம் . ராமசாமி னு வச்சுக்கலாம். என்னோட காலேஜ் ல படிச்சவன். ஹாஸ்டல் மேட். படிச்சதென்னவோ இன்ஜினியரிங்னாலும்.. அவனோட interest full ஆ சினிமாதான். அப்போவே நிறைய கதை சொல்லுவான். எப்படி shot வைக்கிறது... எந்த இடத்துல intervel block இருக்கணும்? என்ன பேரு வைக்கணும்? சில படங்களுக்கு assistant ஆவும் associate ஆவும் வொர்க் பண்ணி இருக்கான். ஒரு காலத்துல நானும் அவனும் சேர்ந்துதான் சான்ஸ் தேடினோம்.. அப்புறம் நமக்கு இது சரிப்பட்டு வராதுன்னு நான் ஜகா வாங்கிட்டேன்.. அவன் எதையாவது சாதிக்கணும் னு அப்படியே ஒட்டிகிட்டான்... 13 வருஷம்! டைரக்ட் பண்ணிட்டுதான் கல்யாணம் பண்ணிப்பேன்னுட்டான். ஒரு படம் டைரக்ட் பண்ணி கொஞ்ச நாள் ஷூட்டிங் போய் நின்னு போச்சு. producer கு வேற ஒரு படம் flop ஆனதால இதுக்கு fund பண்ண முடியல. இன்னைக்கு ஒரு கதை சொன்னான். Classic. எந்த குப்பைய வேணும்னாலும் படமா எடுக்குறவங்க நடுவுல சினிமாவையே மூச்சுக்காத்தா சுவாசிச்சிக்கிட்டு இருக்கான். சீக்கிரம் ஜெயிப்பான். அப்போ யாருன்னு சொல்றேன். Get ready to see the movie.
( அவன் கிட்ட இருந்துதான் எனக்கு பாத்ரூம் ல உட்கார்ந்து படிக்கிற பழக்கம் வந்தது. எப்படியும் ஒரு 15 mins ஆவும்.. அந்த time ஏன் வேஸ்ட் பண்ணனும் )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment