Tuesday, April 28, 2009

வெயில் ...

என்ன வெயில்?.. என்ன வெயில்??...
உச்சி மண்டை தீய்ந்து புகை வந்துகொண்டிருக்கிறது...
வேலை செய்ய bore அடிச்சாலும் AC க்காகவாவது office போய்த்தான் ஆகவேண்டும். இளநீர், தர்பூசணி,கடற்கரை காற்று, இரண்டு அல்லது மூன்று குளியல். எப்படியாவது ஓட்டிவிடவேண்டும்.

நமக்கு ஆயிரம் வழிகள்.

வருடத்திற்கு 10 inch க்கும் குறைவாகவே மழை பெய்யும் பாலைவனத்தில் இருக்கும் மிருகங்கள் என்னதான் செய்யும்?

இதற்கும் வழிவகை செய்து இருக்கிறது இயற்கை.

தண்ணீருக்கு cactus என்று சொல்லப்படும் சப்பாத்திக்கள்ளி.

தரையடியில் வளை தோண்டி வாழும் எலி இனம் அதிகமான வெப்பம் இருக்கும் போது வளையின் வாய்புத்தை மூடிவிடும்.

ஆந்தை வாயை திறந்து தனது இறக்கையால் விசிறி தொண்டையை சூடாற்றிக்கொள்ளும்.

அங்கே வாழும் முயல்களுக்கு நீண்ட பெரிய காதுகள். அதில் உள்ள இரத்த நாளங்கள் வழியாக உடல் சூடு வெளியேறிவிடும்.

இயற்கையாகவே அங்கு வாழும் விலங்கினங்கள் வெளிறிய நிறம் உடையவை. வெளிறிய நிறங்கள் சூட்டை கிரகிப்பதில்லை.

ஆனால் வல்லூறோ கருமை கலந்த பழுப்பு நிறம். அவை என்ன செய்யும்?

தனது கால்களை சிறுநீர் கழித்து ஈரமாக்கிகொள்ளும். இதனால் அங்கே உள்ள இரத்தம் குளிர்வடைந்து உடல் முழுதும் பரவி வெப்பத்தை தணிக்கும்.


ம்ம்ம்ம்ம்...

எனக்கென்னவோ நமக்கும் வல்லூறு வழிதான் சிறந்தது என தோன்றுகிறது.

2 comments:

  1. enna kodumai sir ithu............?

    ReplyDelete
  2. summa sollakoodaadhu... kalakkare po pa... avana nee........?!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete