Saturday, April 18, 2009

அறியாமை வினா?

நிலவில் மலர்ந்த மலர்தானா?
நிலவே உந்தன் நிழல்தானா?
மேகம் வடித்த சிலைதானா?
மேனி எங்கும் மலைத்தேனா?
ஒளியில் உருகும் உடல்தானா?
ஒளிவது உதட்டில் தமிழ்தானா?
கனிய மறுப்பது இதழ்தானா?
கண்டால் அதை நான் விடுவேனா?

No comments:

Post a Comment