Saturday, April 18, 2009

ஏன்?

1.அனைவருமே ஒரு முறையாவது நான் பெரியவன், என்னால்தான் நடந்தது என்று மார்தட்டுவது ஏன்?

2.லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம்கூட உறுத்தாமல் போவது எப்படி?

3.காவல்துறை அதிகாரிகள் மக்களை மரியாதை இல்லாமல்தான் பேசவேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தது ?

4.சத்தம் போடுவது கூட இடையூறாக இருக்கும் என்று தெரியாமல் போவது ஏன்?

5.அடிமுட்டாள் தனமாக இருந்தாலும் teleserials ஐ பிடிவாதமாக பார்ப்பது ஏன்?

6.இருவருக்குமே மொழி தமிழ் என்றாலும் ஆங்கிலத்தில் பேசுவது ஏன்?

7.அடிப்படை நாகரீகம் கூட அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போனது ஏன்?

8.அனைவருக்கும் வணக்கம் என்று இரு வார்த்தைகளில் தொடங்காமல் அவர்களே... இவர்களே... என்று அரை மணி நேரம் நீட்டுவது ஏன்?

9.எல்லா பெண்களுமே மூச்சுவிடாமல் பேசுவது ஏன்?

10.அரைகுறையும், மரபு மீறல்களுமே பெண்ணுரிமை ஆனது எப்படி?

3 comments:

  1. நல்லா இருக்கு.... ஆனா ஏன்? பத்து தானா... ??

    ReplyDelete
  2. அப்போ அப்போ update பண்ணலாம் ...

    ReplyDelete
  3. முட்டாள் தனமாக இருந்தாலும் பேசுவது ஏன்?

    ReplyDelete